Monday 27 April 2015

வலி

வலிகள்
அடிப்பவரை பொறுத்து
தீர்மானிக்கப்படுகிறது
                           -முகி 

Monday 13 April 2015

தமிழனடா நீ !

திணவெடுத்த தோள்கள் எல்லாம்
திரை  கட்டுகிறது என்று மகிழ்ந்தாயோ  ?
வீழ்த்து விட்ட வீரமென்று
வினைபயன்  பெருமை கொண்டாயோ ?
வீ ழ்ந்ததெல்லாம் வீரமல்ல ,
விதைகள் என்பதை அறிவாயோ ?
தமிழினமே!!!
நாசங்கள்  செய்த பின்பும் 
நாணமற்று நடுங்கி நிற்பதேனோ? 
ஒற்றுமை இதுவென்று வேதத்தில் சொன்ன பின்பும் 
வேற்றுமை எண்ணம்  கொண்டு
வேதாளம் சென்றதேனோ ?
கோடிகள் குலம் கொண்டு
கோடியில் நிற்பதேனோ ?
திணவெடுத்த தோள்கள் எல்லாம்
திண்ணையில்  சாய்ந்ததேனோ?
பார் ஆண்ட தமிழினம் இன்று 
பரிதவித்து  நிற்பதேனோ ?
போர்களும் தர்பார்களும் கொண்ட வம்சம்
சோறும் நீரும் இன்றி போனதேனோ?
சேனையும் களிர் யானையும் கொண்ட படைக்கூட்டம்தனை
சொறி நாய்களும் சூழ்ச்சி நரிகளும் துரத்துவதேனோ?
அடிவானமும் அந்திவானமும் கக்கத்தில் வைத்த மக்களெல்லாம்
 துக்கத்தில் நிற்பதேனோ ?  
சாஸ்திரமும்  தர்ம சூத்திரமும் கண்ட கூட்டம் தனை 
எம்மாத்திரமென்று பிறர் ஏளனம் செய்ய கண்டு நிற்பதேனோ?
எம் பெண்கள் முலை அறுத்த 
கைகள் எல்லாம் முட்களாய் போகட்டும் ;
நாணம் கொன்ற 
நாடிகள் எல்லாம் நாசமாய் ஆகட்டும்;
பொறுக்கித்தனம் செய்த பேதைகளே!
நின் குலம் நரகத்தில் செழிக்கட்டும்; 
தமிழினம் வரும்  ஒருநாள்   
வேர் விட்டு ,
முட்டி முளை விட்டு, 
குருத்து கிளை விட்டு,
திண்ண தூர் விட்டு,
கொன்று குலை அறுத்து ,
உன் குருதி குடிக்கும் என்பதை மறவாயோ?
அன்றும் உன் இனம் அழிக்காது 
உன் குணம் அழிக்கும் 
                            -முகி 

Tuesday 7 April 2015

நினைவுஉயிர்

நான் பலமுறை இறந்து  இருக்கிறேன்
ஆனால்,
ஒருமுறை கூட உயிர் கொடுக்க தயங்கியதில்லை
உன் நினைவுகள்
                       -முகி 

வலிமை கண்ணீர்

ஆயிரம் முறை அழுதுருக்கிறேன்
அதன் மடங்களவு  கலங்கி இருக்கிறேன்
உன்னை நினைத்து விட்ட
கண்ணீர் துளிகள் அனைத்தும்
மேலும் மேலும் செழிப்பாக்கியது
என்பதை மறைக்க
எள்ளளவும் என்னுள்  இடமில்லை
                                      -முகி 

இன்முக இறப்பு

சாவிற்கு கூட என்னை பிடிக்கவில்லை
நீ   இல்லாததால்,
ஒரு முறை மட்டும்
வந்து விட்டு போ
இறந்து விடுகிறேன்
இன்முகத்தோடு...:-)
                 -முகி 
உன்னை பற்றி எழுதும் போது
விளக்கு அணைத்து எழுதுகிறேன்
உன் நினைவுகள்
வெளிச்சமாய் இருப்பதால் ...
என்  நினைவுகள் அந்த
 சூரியன் போல் நிலையாய் இருக்க வேண்டும்
என் சோகங்கள் மேகங்கள் போல் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்
என்று எல்லோரையும் போல
எனக்கும் ஆசைதான்,
நான் ஒரு விசித்திர பாத்திரமாய் இருக்கிறேன்
உன்னால்,
உன்  சோகங்கள் எனக்கு
 நிறைய கற்று கொடுத்து இருக்கிறது,
 நீ என்னுடன் இல்லாத உலகத்தில் வாழ,
வாழ வைப்பவரை வணங்குதலே மரபு
வணங்குகிறேன்  என் தோழியை ...!
                                                       -முகி